Tamil unmai mukkona kaathal kathai By Aravinth yohan


நானும் நண்பனும் மிக நெருங்கிய நண்பர்கள். அவன் பெரிய பணக்கார பையனாக இருந்தாலும் என்னிடம் எந்த பாகுபாடும் காண்பித்தது இல்லை .
அவன் தந்தையின் BUSINESS ஐ கவனித்து கொண்டிருக்கிறான் . நான் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் . இருவரும்  அடிக்கடி சந்தித்து கொள்வோம் . இன்று நாங்கள் சந்தித்த போது அவன் தன் காதல் கதையை கூறினான் . தனக்கு ஒரு பெண்ணை பிடித்திருப்பதாகவும் அவளிடம் தன் காதலை சொல்ல கவிதை எழுதி தரவும் கேட்டான் . எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உயிர் நண்பனின் காதல் அல்லவா !!

"தமிழை செதுக்கி 
காதலை புதைத்து 
கவிதையாய் கொடுத்தேன் 
அவன் கையில் "

அவன் என்னிடம் நன்றி சொல்லி தன் காதலை சொல்ல காதலியை தேடி கிளம்பினான். நண்பனிடம் வாழ்த்து\ சொல்லி அனுப்பினேன் . எனக்கும் என் தோழி மீது நீண்ட நாள் ஒரு தலை காதல் . நெருங்கிய தோழி அல்லவா ஆகையால் சொல்லாமலே மறைத்து விட்டேன் . ஆனால் ஏனோ இன்று ஒரு வித புத்துணர்ச்சி நண்பனே தன் காதலை சொல்ல தைரியமாய் செல்லும் போது நான் மட்டும் ஏன் தயங்க வேண்டும் . நானும் என் காதலை சொல்லி விடலாம் என்று ஒரு ரோஜா பூவை வாங்கி கொண்டு தோழியிடம் காதலை சொல்ல புறபட்டேன்'

"மூடி கிடந்த காதல் நினைவு 
நட்பை தாண்டி கொல்லுதே 
அவள் மனதிலும் எனக்கான காதல் கசியுமோ  "

நான் என் தோழியை தேடி என் பைக்கில் சென்று கொண்டிருந்தேன் . வழியில் நண்பனின் காரை பார்த்தேன் , அடடா நண்பன் அவன் காதலியிடம் காதலை சொல்லியிருப்பான் போல என்று அவனை பார்த்து விட்டு செல்லலாம் என்று 
பைக்கை நிறுத்தி விட்டு சென்றேன். அவன் அப்போது தான் அவன் காதலியிடம் கவிதையும்,மலர் கொத்தும் கொடுத்து தன் காதலை சொல்லுகிறான் . அவள் மகிழ்ச்சியாய் கவிதையையும் பூங்கொத்தையும் வாங்கி கொண்டு, கவிதையை படித்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்து ஒரு வித தயக்கத்துடன் மௌனமாய் நிற்கிறாள் . 

நான் நெருங்கி சென்ற பின் தான் பார்க்கிறேன், அவள் வேறு யாரும் இல்லை என் உயிர் தோழி . நல்ல வேலை நண்பன் என்னை பார்கவில்லை . அவள் ஒரு கண்கள் என்னையும் என் கையில் உள்ள ரோஜாவையும் பார்க்க , மறு கண்கள் என் நண்பனையும் நோக்க , நான் கனத்த இதயத்துடன் பின்னோக்கியே செல்கிறேன் .

tamil love strory, tamil kathal kathaigal, tamil triangle love story, aravinth yohan stories, download and read cute stories in Tamil.

"நண்பனின் கால்கள் முன்னோக்கி செல்ல 
என் கால்கள் பின்னோக்கி செல்ல 
அவளின் கண்கள் இருவரையும் நோக்க 
காதல் காவியமாய் "

என் கவிதையை படித்தததும் அவள் சுற்றும் முற்றும் தேடியது என்னை தான் 
என் தோழிக்கு தெரியாத என் கவிதையின் ரசனை. அனால் எனக்கும் தெரியும்  வேலையில்லாமல் கஷ்டங்களோடு  வாழும்  என்னை விட நண்பனுடன் வாழ்ந்தால் அவள்  இன்னும் மகிழ்ச்சியாய் இருப்பாள் என்று. ஆகையால் கையில் கொண்டு போன பூவோடு என் காதலையும் தொலைத்து விட்டு பைக்கை எடுத்து கொண்டு வீடு திருப்பினேன். நண்பன் அவள் பதிலுக்காக காத்திருக்க, கடைசி வரை அவள் அமைதியாகவே நின்றாள் .
           " சில வலிகளின் விளிம்பிலும் 
உண்மை கசிகிறது கதையுமாய் காவியமாய் "
                                                                                                      - முற்றும்
-Written By Aravinth yohan

NOW I DON'T HAVE TIME TO POST MORE POEMS AND STORIES HERE IF I HAVE TIME I WILL WRITE MORE POEMS AND STORIES. IF YOU HAVE GOOD POEMS AND STORIES SEND ME I WILL POST HERE LIKE THIS .
WHATSAPP: 7904253318,
EMAIL: kavidhaitheevu@gmail.com

Thank you, KEEP SHARING ♥ ♥
This is the most recent post.
Older Post

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.