Tamil kavithai tweets from twitter - By Poet Regina

நம் #கோபங்களின் முடிவு எப்போதும் முத்தங்களை நோக்கியதாகவே இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி உன்னுடன் கோபம் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது.

ஏதோ சண்டையிட்டு என்னிடம் பேசாமல் இருக்கிறாய் நீயாய் பேசுவாய் என நானும் நானாய் பேசுவேன் என நீயும் #Ego சுமந்தபடி காத்திருக்கிறோம.

அன்பே... மீண்டும் ஒருமுறை - நான் பொய் கோபத்தோடு இருக்கிறேன்...! என் கன்னத்தோடு உன் உதடுகளை உரசி, என் காதோடு ஒருமுறை சொல்லிவிடு...! ஐ லவ் யூ 

#கையில் இருக்கும் மலர்கொத்து கூட அவளின் கண்ணீரைப் பார்த்து கண்ணீர் சிந்துகிறது ஆனால் ஏனோ அந்த மனிதருக்கு புரியவில்லை அவளது #ஏக்கம்.

Tamil Kathal Kavithaigal From Regina

#நான் இறந்து கொண்டு இருந்தாலும் என் இதயத்தில் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்.. 

#உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் வெறுக்கிறேன் ! "மறந்து விடு" என்று ஒரு நொடியில், நீ கூறிய வார்த்தையினால்  

பள்ளிகூட காதல் பள்ளிக்கூடம் வரை கல்லூரிகாதல் கல்லூரிவரை பேஸ்புக் காதல் சாட்டிங் அல்லது மீட்டிங் வரை கல்யாணம் ஆனா பிறகு வரும் காதலே கடைசி வரை

உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்த தெரியவில்லை எனக்கு...! ஊமையாகி அழுகிறது உணர்வற்ற என் மனது...! #விரட்டிப் பார்த்தும் விழக மறுக்கிறது நினைவு

பெண்ணே உன்கண்களிள் அப்படி என்னத்தான் இருக்கிறது திரும்ப திரும்ப என்னை பார்க்க செய்கிறது இரவில் உன்விழியின் ஔியில் என்விழிகள் உறங்க மறுக்கறது 

#பொழுதை போக்க காதலித்தவன் கவலையின்றி வாழ்கின்றான்.. #உன்னையே பொழுதாய் நினைத்த நான் #தினம் தினம் சாகின்றேன்.

#உன் விரல் பிடித்து நடக்கும் பொழுது விலகிக் கொள்ளும் #வெட்கம் உன் #விழிகள் பார்க்கும் பொழுது பற்றிக் கொள்கிறது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.