Tamilnadu Jallikattu porattam Kavithai 

வீரம் விளைந்த மண்ணில் 
கோழைகளை காணலாகுமா ?

வீர விளையாட்டை வீட்டுக்கு 
அனுப்பலாகுமா ?

ஜல்லிக்கட்டை அழித்து 
தமிழ் கலாச்சாரத்தை அழிக்க பார்த்தாயா ?

மாட்டுக்காக இளைஞன் 
வருவானா என்று நினைத்தாயோ ?

Tamilnadu Jallikattu porattam Kavithai , jallikattu tamil kavithai, jallikattu veera kavithai, 2017 jallikattu breaking poem in Tamil


கை குழந்தைக்கும் 
கலாச்சாரம் சொல்லி குடுக்கும் 
தமிழகமடா இது ....!!!

காட்சி பொருளா காளை ??
எங்கள் ஜல்லிக்கட்டின் 
சாட்சி பொருளடா காளை ...!!!

மத்திய அரசே உனக்கு 
எங்கள் கலாச்சாரம் என்ன கேலி கூத்தா 

அடிமை அரசியல்வாதிகளை தானே கொண்டது 
என்று இழிவாய் நினைத்தாயோ 
அடிமட்டம் வரை இறங்கி போராடும் தமிழனை மறந்து !!

சிலரை போல் காலை பிடித்து வாழும் தமிழன்
என்று நினைத்தாயோ
காளைகளை அடக்கி ஆளும் தமிழனாடா நாங்கள்

சமையல் கட்டிலே அடங்கி கிடக்கும்
பெண்களை கொண்டது தமிழகம் என்று நினைத்தாயோ
வீதி இறங்கி போராடும்
வீர தமிழச்சிகள் என்பதை அறியாயோ ??

இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டும் அல்ல 
விவசாயிகளின் வாழ்வுரிமை போராட்டமடா ...!!

வாடிவாசல் திறக்கும் வரை 
வீட்டு வாசல் திறக்காது 

பீட்டாவை தடைசெய்யும் வரை 
எங்கள் படை ஓயாது !!!

#justiceforjallikattu #BANPETA

- அரவிந்த் யோஹன்

You can send Your own poems to us, We will post Here...!!
You can contact whatsapp/Hike-9043932759 [Aravinth Yohan]
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.