Kanavugalin marmam | Tamil story 2017 written by Me [Aravinth Yohan]

கனவுகளும் , கற்பனைகளும் , அறிவியலும் 
புகுத்தி படைக்க பட்ட ஒரு கதை வடிவிலான 
என் படைப்பு ;

அன்று ஏனோ சீக்கிரமே விடிந்து விட்டது 
ஆனால் சுட்டெரிக்கும் சூரியனை தான் காணவில்லை ,
இங்கு வீசி செல்லும் தென்றலுக்கு 
வேலையில்லை ....!!
இது என்ன இருள் சூழும் பனிக்கலாமா 
இல்லை இன்றுடன் முடியும் கலி காலமா ???
மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் 
ஆனால் 
கண்முன்னே எல்லாம் போலிகள் 
நான் எங்கே இருக்கிறேன் ?? ஏன் இந்த தனித்த நிலைமை ??
விடைகாணும் ஆவலில் இதயம் துடிக்க 
கண் முன்னே கனவுகளாய் தெரிகிறது என் வாழ்க்கை !!!

ஆம் !! நினைவில் வருகிறது ..,வந்து விட்டது ,
அன்று வழக்கம் போல் பணிக்கு 
செல்ல கிளம்பிவிட்டேன் .நேரம் ஆகி விட்டது . நடந்து சென்றால் 
தாமதம் ஆகி விடுமே என்று கைகளை நீட்டி பறக்க தொடங்கிவிட்டேன் .
ஆம் இது இரண்டாம் உலகம் . புவி ஈர்ப்பு குறைந்த உலகம் , ஓரிரு முறை 
முயற்சி செய்தால் மட்டுமே நடக்கவோ பறக்கவோ அல்லது எதையுமே செய்ய முடியும் ..!!! காற்றை மட்டுமே உண்டு வாழும் 
எங்களால் அதிக நாட்கள் இறப்பின்றி வாழ முடியும் !! ஆனால் 
பெருபாலும் எங்கள் நாட்கள் நீள்வதில்லை !!
காரணம் மாமிசம் உண்ணும் மனிதர்களும் இங்குன்ட்டு , அவர்கள் 
தனித்தீவில் வாழ்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் பறந்து வரலாம் எங்கள் உயிரை பறித்து செல்லலாம் !!!

இருந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என்ற வைராக்யத்தில் 
வாழ்பவர்கள் தான் நாங்கள் , நானும் தான் !!
பல கனவுகளை சுமந்து விடாமுயற்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் !!

வழக்கம் போல் பண்ணிக்கு செல்ல காற்றை உண்டு தயாராகிக்கொண்டிருந்தேன் , தொலைவில் பொன்னிற மேகக்கூட்டம் 
என் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது !!! பொன்னிற விண்மீன் மீது 
என் வீட்டை அமைத்தலோ பொன்னிற மேகக்கூட்டங்கள் 
என்னை நோக்கி வருகின்றன என்ற சந்தேகத்தின் நடுவே, வெளியே எட்டி பார்க்கிறேன் ..!!!
ஓ  அதிர்ச்சி , இது என்னவளின் சூழ்ச்சி 
பொன்னிற மேகத்தை ஆடையாய் உடுத்தி என்னை 
மெய்சிலிர்க்க செய்து விட்டாள் . 
" வெண்ணிற மேனி கொண்டு 
பொன்னிற மேகம் உடுத்தி
        மிடுக்காய் நின்றாள் என் தேவதை "
 வழக்கம் போல் என்னை இடையூறு 
செய்யவே வந்திருப்பாள் இந்த அழகு சிறுக்கி ..!! ஆகையால் நான் 
எதையும் கண்டுகொள்ளாதவனாய் காற்றால் பசியாறிக்கொண்டிருந்தேன் !
என்னை இடைஞ்சல் செய்யாதே என்று சொல்லி முடிக்கும் முன் 
என் மீது பாய்ந்துவிட்டாள் , அவள் உதட்டின் செயற்கை சுவாசம் 
ஒரு நொடியில் என் பசியாற்ற உணர்ந்தேன் !!கண் முழித்து பார்க்கும்முன் 
இரவு எனக்கு அழைப்பு கொடுத்து மறைந்தாள் !!

பணிக்கு சென்று திரும்பியதும் , வழக்கமாக நாங்கள் சந்திக்கும் 
வெண்ணிற விண்மீனை நோக்கி பறக்க தொடங்கினேன் !! இரவு நேரம் என்பதால் பறக்க சற்று சிரமமாக தான் இருந்தது !! வழி எங்கும் வேறு இடையூறாய் அனைவரும் தன் இணையுடன் நடனமாடி கொண்டிருந்தார்கள் .
ஒரு வழியாக வெண்ணிற விண்மீனை அடைந்து விட்டேன் ..!!
ஓ !! இது என்ன புது மனிதர்கள் , ஐயோ ,இவர்கள் மாமிச உண்ணும் மனிதர்கள்,
இவர்களிடம் மாட்டினால் என் கொடூர மரணம் அடுத்த நொடியில் நிகழும் ,
வந்த வழியே திரும்ப பறந்தேன் , ஒருவன் பார்த்து விட்டான் , என்னை வரிசையாக பின்தொடர தொடங்கி விட்டார்கள் ., ஐயோ இயற்கையே 
இவர்களை ஏன் படைத்தாய் ?? என் கனவுகளையும் ஆசைகளையும் 
புதைத்து விடுவார்கள் போல இந்த மாமிச மனிதர்கள் !! என்று 
எண்ணி கொண்டே நிலவில் போய் ஒளிந்து கொண்டேன் !!!

அப்புறம் தான் தோன்றியது , என்னவள் என்னை காண வந்திருப்பாளே ,
அவள் என்ன ஆனாள்  , அவளுக்கு என்ன ஆனதோ என்று மனது பட படக்க 
காற்றை கிழித்து வேகமாய் வெண்ணிற விண்மீனை நோக்கி பறந்தேன் !!!
ஒ என் தேவதையை கண்டு கொண்டேன் , என்னை தேடி அலைந்து கொண்டிருக்கிறாள் , நல்ல வேலை மாமிச மனிதர்கள் இவளை காணவில்லை !! அவளுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்க அவளுக்கு பின்னாலே சென்றேன் ,
ஆனால் எனக்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது , அவளை நோக்கி மாமிச மனிதர்கள் பாய்ந்து வருகிறார்கள் , பறந்து தடுக்கிறேன், முடிந்த அளவு முயற்சிக்கிறேன் ,  ஆனால் 
நானோ மாட்டி கொண்டேன்..  என்னை தூக்கி கொண்டு அவர்கள் மேல செல்ல 
என்னவளின் கதறல் ஒலி  மட்டுமே என் காதில் கேட்கிறது அவள் பிழைத்து கொண்டால் என்று தோன்றினாலும் , எல்லாம் முடிந்து விட்டது , அவள் கண்ணெதிரே என் உடல் கடிக்க பட்டு இரண்டாக்க பட்டு 
மாமிச மனிதர்களால் கொண்டு செல்ல படுகிறது,..!! என் உடலில் இருந்து அவள் கண்ணெதிரே விழுந்த ஓரிரு ரத்த துளிகள் விழுகிறது . அது அவள் பெயரையே தாங்கி நிற்கிறது ..!!! அவள் கண்ணீரை காணும் முன்னே என் உயிர் பிரிந்து விட்டது !!

ஓ இது தான் என் வாழ்க்கையா ??? என் கனவுகளும் ஆசைகளும் புதைக்க பட்டு விட்டதா ??. நான் ஏற்கனவே இறந்து விட்டேனா ?? அப்படியானால் இப்போது உயிரோடிருக்கும் நான் யார்?? எங்கே இருக்கிறேன்?/ 
என்னவள் என்ன ஆனாள்  ??
-----------------------------Hunter Begins - தொடரும்.......................................................
           
இப்பதிவு பற்றி உங்கள் கருத்துக்களை எதிரிபார்க்கிறேன் !!!
நன்றி !!!!!!
நட்புடன் !!!!!
எழுத்து&உரிமை : அரவிந்த் யோஹன் 


You can zoom in or zoom out our FONTS  by clicking A+ and A-

You can send Your own poems to us, We will post Here...!!
You can contact whatsapp/Hike- 9043932759 [Aravinth Yohan]
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.