💟என் வீட்டிற்க்கு முதல் முறை வந்த தேவதை அவள்...
💟இரு கைகள் நீட்டி அவள் பாதம் ஏந்தியது வாசல்...
💟எதார்த்தமாய் எட்டிப் பார்பது போல் ஜன்னல் வழி வந்தது தென்றல்....
💟அவள் அமர்வதற்கு ஏதுவாய் தன்னைச் சரி செய்து கொண்டது நாற்காலி....
💟அதனைப் பொறாமையுடன் பார்த்து ஆடியது ஊஞ்சல்.....
💟இன்னும் அவளை வேகமாக தீண்ட வேண்டும்என்றகோரிக்கையுடன்மின்விசிறியை கெஞ்சியது காற்று......
💟அவள் முகம் கழுவப் போனதும் கேலியாக என்னைப் பார்த்து சிரித்தபடியே மூடியது குளியலறைக் கதவு.....
💟கடலில் கலக்கப் போன கங்கை நதியை கர்வமாக தாண்டிச் சென்று சொர்க்கத்தில் கலந்தது அவள் முகம் கழுவிய நீர்.....
💟அவள் முகம் துடைக்க முன்னால் வர வேண்டும் என்று அலமாரிக்குள் போர் புரிந்து வென்றுஎன்கையில்சிக்கியது துணி....
💟எதிர் பாராத அவள் சமையலறை நுழைவில்... சட்டென்று சிலாகித்து விசிலடித்தது குக்கர்........
Whatsapp forward sms kavithaigal, whatsapp kathal kathai, whatsapp kathal kavithai, whatsapp sms download, whatsapp new poems 2017, amazing hd images of sai pallavi quotes of love
💟சாப்பிட அவள் தரையில் அமர்ந்ததை சற்றும் எதிர்பார்க்காமல்... ஆனந்த கண்ணீரில் சில்லென்று ஆனது என் வீட்டுத் தரை....
💟சாப்பாடு வருவதற்குள் எப்படியும் அவளை ஒரு முறை அருகில் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி அடைந்தது பளபளக்கும் தட்டு....
💟சொர்க்கத்திற்க்குச் செல்லப் போகும் மகிழ்ச்சியில் அழகழகாக அணிவகுத்து நின்றன உணவுகள்.......
💟அவளை அழ வைத்து விடக் கூடாது என்ற கவனத்துடன் அவள் வாய்க்குள் செல்லும் வழியில்..... அவள் விரலில் இருந்து தானாக தவறி விழுந்து உயிர்த் தியாகம் செய்தது பச்சை மிளகாய்.....
💟அவள் சாப்பிட்டு விட்டு எழுந்ததும் கதறி அழுது நீரில் அடித்துச் செல்லப்பட்டன சில சபிக்கப்பட்ட பருக்கைகள்.....
💟அவள் பார்த்ததும்... என் அறை என்று தெரிய வேண்டும் என்று நெடுங்காலமாக திட்டம் போட்டு என் அறைக்குள் ஒழுங்கின்றி கிடந்தன பொருள்கள்.....
💟நான் உள்ளே வந்ததும் அடைத்து விட்டேன் என்ற பொறாமையில்... அவளைநான் நெருங்கும் போது என் தாயின் குரலில் என்னை அழைத்தது என் அறைக் கதவு.....
💟யாருக்கும் தெரியாமல் அவள் எனக்காக என் அறைக்குள் ஒளித்து வைத்த பரிசை.... எப்படியும் களவாடி விட வேண்டும் என்று பதட்டத்தில் பறந்தது குப்பைகள்.....
💟போய் வருகிறேன் என்று அவள் கூறிய போது மின்சாரம் தடை பட்டு... என்னைப் போல் வாய் அடைத்துப் போனது என் வீடு...
💟அவளை வழி அனுப்பும் போது வாசலில் நான் பெற்ற நெற்றி முத்தத்தை எப்படியோ நுகர்ந்து.... என் தலையில் தட்டியது என் வீட்டு வாசல் நிலை......
💟இனிமையான தேவதைக்கு இத்தனை பேர் போட்டியா....???
💟💟💟💟
You can zoom in or zoom out our FONTS  by clicking A+ and A-

You can send Your own poems to us, We will post Here...!!
You can contact whatsapp/Hike-9043932759 [Aravinth Yohan]
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.