Tamil amazing love wish poem

best couple photography wallpaper

உன் சட்டை
பொத்தானில்
மாட்டிய சிக்கு
முடியாய் சிக்கிக்
கொள்ள ஆசை...
சின்னஞ்சிறு கதைகள்
பேசி உன் மடி
சாய ஆசை...
உறக்கத்திலும் உன்
நினைவு நீங்கா
தொல்லை தர ஆசை...,
உனக்கே தெரியாமல்
உன் எச்சில்சோறு
உண்ண ஆசை...
உன் காலடி சுவடில்
என் கால் தடம்
பதிக்க ஆசை...
என் முதல் சேய்
நீயாகவும் உன்
இரண்டாம் தாய்
நானாகவும் ஆசை...
உன் சுவாசத்தின்
ஸ்பரிசமாய் உன்னோடு
கலக்க ஆசை...
மூச்சு முட்ட உனை
காதலிக்க ஆசை...
உன் இதய துடிப்போடு
என் ஆயுட்காலத்தை
சேர்க்க ஆசை...,
இத்தனையும் இல்லை
என்றால் அக்கணமே
உன்னருகே என்
உயிர்ப் பிரிய ஆசை...
சா.லலிதா அச்சு

Search Tearms of Love wishes Poem:
Tamil kathal asai kavithai, love wish poem, future love wish poems, download best couple images, Read long poem about future life, cute poems of lalitha achu 2016
 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.