ஆசான் சொல்லி திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,
முழுதாய்.. மூன்று வார்த்தை பேசவராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்..
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...
படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...
திருமணம் செய்துவைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள்,
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள்,
நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...
_அந்த தாய்க்காக காத்திருக்கிறது..._ # _இந்த_கடைசி_மூச்சு..!_
ஊரே ஒன்று கூடி..,
உயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத்தெரியாதா என்ன,
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும்... இந்த உயிரென்று?
வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்...
.............வாசலில் ஏதோ சலசலப்பு,
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..
என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் ,
அது அவள்தான், மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப்போலவே...
கண்களில் மச்சம்,
சப்பைமூக்கு, கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு,
அப்பா அப்பா என்று அழுகிறாள்,
அவள் எச்சில் என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
# அடங்குகிறது ............................
_*தாயிடம் தப்பிவந்த*_
_*மண்ணும்...*_ _*கல்லும் கூட*_
_*மகளின்....*_
கைப்பட்டால் சிலையாகும் ....!!!

Tamil appa magal kavithai, thanthai magal anbu kavithai, appa makal paasa kavithai, Father and daughter poem, Tamil father and daughter kind poem 2016

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.