My sad love life poem - kathal privu kavithai 2016

my sad life poem, tamil kathal tholvi kavithai, love failure poems, love breakup kavithai, kathal privu kavithai, tamil love failure poem images download

என் வாழ்வில் மறைக்க பட்ட கிழிந்த பக்கங்களில் சில
என் மன ஆறுதலுக்காய்.....கவிதை வடிவில் ...!! ♥ ♥
.
வலிகள் பல இருந்தாலும் வழிந்தோடும்
கண்ணீராய் செல்லா நினைவுகள் சில....
அதில் வருத்தி கொண்டே இருக்கும் என்னவளின் நினைவுகள் பல ..!!!
.
எதிர்பாராத வேளையில் என்னை
எதிர்பார்த்து வந்தாலே அவள் ...
.
அவள் ஒரு நிமிட சந்திர்பிற்க்கு
ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தவன் நான் ...!!
.
எங்களுக்குள்ளே காதல் உண்டு ,
எங்களுக்குள்ளே வாழ்க்கை உண்டு ...
.
கடல் தாண்டி சென்றாலும் காத்திருப்பேன் என்றவள் அவள் ..!!
எதையும் தாண்டி கரம் பிடிப்பேன் என்றவன் நான் ...!!1
.
காதலுக்கும் பஞ்சமில்லை கவிதைகளுக்கும் குறைவில்லை ,
சிறகடித்து பறந்தோம் காதலோடு நாங்கள்  ,  
எவரும் எட்டா உயரத்திலே...
.
எனக்காய் வாழ்ந்ததால் என்னவோ பாவை
அவள் கூண்டு கிளியானாள் 
சிறகை இழந்த பறவையாய் ..
.
நானோ இன்று சிறகிருந்தும் பறக்க முடியா
சிலுவையறைந்த பறவையாய் ...
.
எழுத படாத வாழ்க்கை விதிகளின் பயணம் ஈராளம் இன்று ,
எழுத பட்ட எங்கள் காதல் மைதனாத்தில்
உன்னுள் மறைந்[த்]த காதல் என்றும்
என்னுள் உண்டு ...!!
.
உனக்காய் வாழ்ந்த வாழ்க்கை 
என்றும்  என் மனதில் உண்டு...!!

கூட்டிற்குள் அடைபட்டாலும்
உனக்கு என்மேலே காதல் உண்டு ..
.
இதயத்தை கிழிக்கும் வலிகள் என்றும்
என்னுள் உண்டு ,
அதை மறைக்கும் புன்னகையும்
என்றும் எனக்கு உண்டு
.
எனக்காய் உறவுகள் பல உண்டு
ஆனால் உன் போலே
யார் உண்டு ...!!!
.
உனக்கும் ஒரு நாள் விடுதலை உண்டு,
அது என்னாலே உண்டு ...!!
.
காமம் தாண்டி வாழ்ந்த காதல் இன்று
காற்றோடு அன்பே ...!!
உனக்காய் நான் வடித்த கண்ணீர் துளிகளை
என் கவிதை சொல்லும் ,
உனக்குள் புதைந்[த்]த காதலை யார் அறிவார் அன்பே..!!
.
விழித்து கொண்டே துடிக்கிறது என் இதயம்
ஒவ்வொரு துடிப்பிலும் உன் காதலை தேடி ...!!
.
கண்ணீருடன் உன் கனவு காதலன்
உன் வருகை நாடி ...பெண்ணே...!!!

-அரவிந்த் யோகன் 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.