kathal vaalkai kavithai, kathal soga vaalkai kathai, 
tamil kathal kavithai, tamil kathalan kavithai

தென்றலின் பிழையில்
பூக்கள் நறுமணம்
வீசிட மறுப்பதில்லை..!

கடலின் பிழையில்
படகுகள் திசைநோக்கி
பயணித்திட மறுப்பதில்லை..!

மானுடத்தின் பிழையில்
மனச்சாட்சி இரக்கத்தினை
சுரந்திட மறுப்பதில்லை...!

சிறகுகளின் பிழையில்
பறவைகளின் வானம்
விரிந்திட மறுப்பதில்லை..!


எதுவும் எதுவாக
இல்லாவிட்டாலும் இயல்புகள்
இயங்கிட மறுப்பதிலலை..!


என் ஆருயிரே...!
வாழ்வின் பிழைகள்
நம் கூடுகளை
ஒன்றுக்கூட விடாமல்
சதிராட முயன்றாலும்
நம் உயிர்கள்
காதலால் இணைந்து
காவியம் படைத்திட மறுப்பதில்லை..!




என் வாழ்வில்
திருமணம் என்பது
வெற்று சடங்குதான்...!

சடங்குகளை கடந்து
சங்கடங்களை மறந்து
நம் காதலை வாழ்த்தி
நாமும் வாழ்ந்து காட்டுவோம்

நீ என் திருமதியாக
நான் உன் திருமகனாக

வாழ்ந்து காட்டுவோம்....
இறுதிவரை....!

நம் காதல்
காலத்தையும் தாண்டி வாழும்..!


-இரா.சந்தோஷ் குமார்

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.